பெரியகல்லாறில் சடலம் மீட்பு –மரணத்தில் சந்தேகம் வெளியிட்ட உறவுகள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் இன்று (09)சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெரியகல்லாறு பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பொன்னுத்துரை சின்னராசா(79வயது)என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீடு கட்டும் பணி நடைபெற்றுவரும் நிலையில் அதனை பார்வையிடச்சென்றவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் காணப்படுவதாகவம் உறவினர்கள் தெரிவித்தனர்.
அவர் கொலைசெய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்றும் ஏற்கனவே பல அச்சுறுத்தல்கள் காணப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.