சுவிஸ்உதயம் தலைமைக்காரியாலயத்தில் அரைக்கும் ஆலை திறந்துவைப்பு


கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி அபிவிருத்திகளுக்கான சுவிஸ் உதயம் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.மட்டக்களப்பு,சுவிஸ்கிராமத்தில் உள்ள சுவிஸ் உதயம் கிழக்கு மாகாண தலைமைக்காரியாலத்தில் வறிய மக்களின் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் அரை ஆலையொன்று இன்று திறந்துவைக்கப்பட்டது.

மிளகாய்த்தூள் மற்றும் அரிசி அரைக்கும் ஆலையானது சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் தாய் சங்க தலைவர் சுதர்சன் லிங்கன்,தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகம் மற்றும் தாய்ச்சங்க நிர்வாக உறுப்பினர் எட்வர்ட் சிறி,கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் உட்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் தொழில்களை உருவாக்கும் வகையிலும் இந்த அரை ஆலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.