இனங்களிடையே நல்லுறவினையும் புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் வகையிலான இஃப்தார் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோத்தர்களின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இஃப்தார் நிகழ்வு மாநகர ஆணையாளர் எந்திரி ந. சிவலிங்கம் தலைமையில் மாநகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இடையில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற மேற்படி இஃப்தார் நிகழ்வுக்கான விசேட உரையினை கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி எஸ்.எல்.எம். நஷ்மல் பலாஹி அவர்கள் ஆற்றியிருந்தார்.
அத்துடன் இந் நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.