05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த கோட்டைமுனை கனிஸ்;ட வித்தியாலயம் -இரண்டு இரட்டையர்களின் சாதனை


மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவி; 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல்நிலைபெற்று சாதனை படைத்துள்ளதுடன் அதிலும் இரண்டு இரட்டையர்களும் சாதனைபடைத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில் பாடசாலைகள் மட்டத்தில் முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டவர் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆர்.ரித்திக்கா ஷமி (189 புள்ளிகள் ) என்பதுடன் இவருடன் உடன் பிறந்த இவரது சகோதரர் ஆர். ஸ்ரீகித் ரித்தேஷ் 181 புள்ளிகளை பெற்றுள்ளார்.

அதே போன்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டவர் அதே பாடசாலையினை  சேர்ந்த வி. கேஷாலினி ( 186 புள்ளிகள் ) என்பதுடன் இவருடன் உடன்பிறந்த சகோதரி வி. கார்த்திகாயினி ( 164 புள்ளிகள் ) பெற்றுள்ளனர்.

இதேநேரம் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் இம்முறை 141மாணவர்கள் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில் அவர்களில் 57மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகம்பெற்று சித்திபெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருமைத்துரை தெரிவித்தார்.

கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் இம்முறை 100 புள்ளிகளுக்கு மேல் 118மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.