தேசிய உதைபந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவினுடைய 34 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று மாலை கொழும்பு சுகததாச விளையாட்டு நேற்று ஆரம்பமானது.
இந்த விளையாட்டு விழாவில் ஒரு அங்கமாக நேற்று மாலை மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி மாவட்ட அணிகள் மோதிய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெற்றது.
இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக கலந்துகொண்ட மண்முனைமேற்கு இளைஞர் கழக வீரர்கள் இரண்டாம் இடத்தினை பொற்றுக்கொண்டனர்.
போட்டியில் கலந்துகொண்ட மட்டக்களப்பு அணி வீரர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது வீரர்கள் தாண்டவன்வளி சந்தியில் இருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை மாலை அணிவிக்கப்பட்டு மேள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வில் படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் நிர்வாகத்தினர், விளையாட்டுக் கழகங்களின் நிருபாக சபை உறுப்பினர்கள், வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.