(நிருபர் லக்ஷன்)
மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் அமைத்துள்ள மட்/மே/கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உதயகுமார் கல்வி மையத்தினால் இன்று (20) க.பொ.த சா.தர மாணவர்களுக்கான விஞ்ஞான பாட மேலதிக வகுப்பு ஆரம்பம்.
உதயகுமார் மையத்தின் ஏற்பாட்டில் கடந்த இரண்டு வருடம் 2021/2022 காலப்பகுதியில் நடாத்தி வந்த விஞ்ஞான பாட மேலதிக வகுப்பினை இவ்வருடமும் (2023) உதயகுமார் கல்வி மையத்தின் ஸ்தாபக தலைவர் உதயகுமார் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயகுமார் கல்வி மையத்தின் ஆலோசகருமான பா.அரியநேத்திரன்,பாடசாலை அதிபர் சிறிதரன், பிரதி அதிபர் இளங்கீரன், உதயகுமார் கல்வி மையத்தின் இணைப்பாளர் டினாத், டி.தனுஜா (ஆசிரியர்,உதயகுமார் கல்வி மையத்தின் ஆலோசகர்),விஞ்ஞான பாட ஆசிரியர் திரு.மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி சம்பந்தமாகவும் பாடசாலையின் தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது என குறிப்பிடத்தக்கது.