(பொன்.நவநீதன்)
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 2023 ஆண்டிற்கான சிறந்த செயற்ப்பாட்டிற்காக அதிபர், ஆசிரியர்களை மதிப்பீடு செய்து சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா விருதினை மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட வாகரைக்கோட்ட பாடசாலைகளில் ஒன்றான கட்டுமுறிவுக்குளம் அரசினர் பாடசாலையின் அதிபர் ஜீவரெட்ணம் ஜீவனேஸ்வரக்கு கிடைத்துள்ளது.
குரு பிரதீபா பிரபா விருது நேற்றைய தினம் கிழக்கு மாகாண. மாகாண பணிப்பாளர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது சிறந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குரு பிரதீபா பிரபா விருது மாகாண கல்வி பணிப்பாளரினால். வழங்கி வைக்கப்பட்டது
அத்துடன் கட்டுமுறிவுகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலுள்ள சிறந்த ஆசிரியர்களுக்கான குரு பிரதீபா பிரபா விருது பாடசாலை ஆசிரியர்களான கே.சசிக்குமார், எஸ்.சத்தியசீலன், ஏ.தனராஜ் , ரி.பிரமச்சந்திரன் ஆகிய நான்கு ஆசிரியர்களுக்கும் இம்முறை கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த கட்டுமுறிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் ஜீவரெட்ணம் ஜீவனேஸ்வரன்,
கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி அவருடைய காலத்தில் 2019 ஆம் ஆண்டிலிருந்து கட்டுமுறைவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பொறுப்பேற்றதிலிருந்து தற்போது வரைக்குமான காலப்பகுதியில் பாடசாலை நேரத்தில் தனிப்பட்ட விடுமுறைகளை தவிர்த்து இருந்தேன். அதன் அடிப்படையில் மாகாண கல்வி பணிமனையின் மதிப்பீட்டின் அடிப்படையில் தற்போதைய கல்குடா கல்வி வலய பணிப்பாளர் ரி.அனந்தரூபன் அவர்களின் வழிப்படுத்தலும் இவ்விருதுக்கு உருத்துடையவராக அமையப்பெற்றேன்.
அத்துடன் இவ்விருதினை பெறுவதற்கு எனது பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாக அமையப்பெற்றது இத்தருனத்தில் எனது நன்றிகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதுடன் என்னைப் போன்று இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த குரு பிரதீபா பிரபா விருதினைப்பெற்ற அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
கல்குடா கல்வி வலயத்திலுள்ள வாகரைக் கோட்டத்தில் இம்முறை சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா விருதினை கட்டுமுறிவுக்குளம் பாடசாலை அதிபர் ஜீ.ஜீவனேஸ்வரனுக்கு மட்டும் கிடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.