அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை 90 கிட்ஸ் பழைய மாணவக்குழுவினர் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்


வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் பாடசாலைகளில் கல்வி கற்ற 90 கிட்ஸ் எனும் பழைய மாணவக்குழுவினர் இணைந்து 4 பாடா பழைய மாணவக்குழுவினர்  சாலைகளில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவர்களுக்கு இன்று கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

1990 ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் இணைந்தே இந்த செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இதன் அடிப்படையில் அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயம் அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயம் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிதியை உள்நாட்டில் வாழும் பழைய மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்கள் இணைந்து வழங்கியிருந்தனர்.

இதுபோன்ற பல்வேறு செயற்றிட்டங்களை 90 கிட்ஸ் குழுவினர் முன்னெடுத்துள்ள நிலையில் எதிர்காலத்தில் கல்வி அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்த தீர்மானங்களும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.