இனமத பேதமற்ற அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசியல் தலைமைகளின் பங்களிப்பு

வி.சுகிர்தகுமார்

இனமத பேதமற்ற அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசியல் தலைமைகளின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் அம்பாரை மாவட்ட அரசியல் பிரமுகர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு அக்கரைப்பற்று மெங்கோ காடுன் விடுதியில் இன்று நடைபெற்றது.

தேசிய சமாதான பேரவையின் அனுசரைணயுடன் றுகுணு லங்கா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சர்வமத குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் அக்கரைப்பற்று அடடாளைச்சேனை ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட அரசியல் பிரமுகர்கள் சமயத்தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சர்வமத குழுவின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
றுகுணு லங்கா நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வில் தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்.யு.மதானி உவைஸ் வளவாளராக கலந்து கொண்டார்.
இதன்போது இனநல்லுறவுக்கான வழிமுறைகள் அதற்காக அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டிய செயற்றிட்டங்கள் கருத்துரை வழங்கினார்.
இலங்கையில் சமாதானத்தையும் இனநல்லுறவையும் ஏற்படுத்துவதற்கு தேசிய சமாதான பேரவை பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருதாகவும் கூறினார்.
14 மாவட்டங்களிலும் பிரதேச சமய குழுக்கள் அமைக்கப்பட்டு பிரதேச மற்றும் மாவட்ட தேசிய ரீதியிலான இனப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை எடுத்து வருவதாகவும் குறிப்பி;ட்டார்.
இதுவரையில் 53 இன ரீதியான மோதல்களை தவிர்ப்பதற்கு அமைப்பு செயற்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.
சமய சகவாழ்விற்கு அரசியல் தலைவரிகளின் பங்களிப்பு என்ன? நடு நிலையான சமாதானத்தையும் இன நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகள் என்ன? போன்றவை பற்றியும் கருத்துரைகளும் கருத்துக்களும் இதன்போது பரிமாறப்பட்டன.