மட்டக்களப்பு வந்தாறுமூலை வரலாற்று சிறப்புபெற்ற மருங்கையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவ பெருவிழாவின் திருவேட்டை திருவிழா இன்றைய தினம் இடம் பெற்றது.
ஆலயத்தின் உற்சவ பெருவிழாவானது சென்ற நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி 8ம் திருவிழாவாகிய நேற்று மாலை 4.00 திரு வேட்டைக்காக ஆலயத்திலிருந்து எம்பெருமான் விசேட தீப ஆராதனைகளுடன் படைகள் சூழ கலை கலாச்சார நிகழ்வுகளுடன் வந்தாறுமூலை வயல்கரை பிள்ளையார் ஆலயம் வரை சென்று அங்கு திருவேட்டை இறுதி சங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ கா. ஜெயக்குமார் தலைமையில் விசேட பூசை இடம்பெற்றது.
திருவோட்டை நிகழ்வுக்கு சர்வமத இந்துமத குரருபீடாதிபதி சாம்பசிவ ஐயப்ப தாஸ குருக்கள் திருவேட்டை நிகழ்வினை நடாத்தினர்.
திருவேட்டை நிகழ்வுக்காக புறப்பட்ட எம்பெருமானுக்கு மட்டக்களப்பு நோக்கிய பிரதான வீதியில் இருமருங்கிலும் நிறகுட தாம்பூலன்கள் எம்பெருமானுக்கு பிரசாதங்கள் என்பன வைத்து பெருமானை வழிபட்டனர்.
கிராமிய கலை கலாச்சார பண்பாடுகள் நிறைந்த கலை கலாச்சார நிகழ்வுகள் திருவோட்டை நிகழ்வை மேலும் அலங்கரித்தன.
முதன்முதலாக வந்தாறுமூலை மருங்கையடி விநாயகப்பெருமான் வந்தாறுமூலையில் அமைந்துள்ள வயல்க்கரை பிள்ளையார் ஆலயத்தில் இம்முறை திருவேட்டை நிகழ்வை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருவேட்டை சங்கரமடம் பெற்றதும் விசேட பூசைகள் இடம்பெற்று பின்னர் எம்பெருமான் வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலயம் சென்று பின்னர் பிரதான வீதியூடாக ஆலயத்தை வந்தடைந்து பிரயாசித்த பூசைகள் இடம்பெற்ற பின்னர் திருவேட்டை நிகழ்வு நிறைவு பெற்றது.
திருவேட்டை நிகழ்வுக்காக பெருமளவான அடியார்கள் திருவேட்டை நிகழ்வை கண்டு கழிப்பதற்காக வீதிகள் அத்துடன் திருவேட்டை இடம்பெற்ற வயல்கரை பிள்ளையார் ஆலயம் முன்றல்வரை பெருமளவான அடியார்கள் வருகை தந்தனர்.
ஆலயத்தின் வருடாந்த உற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (15) ஆலய முன்றலில் அமைந்துள்ள அதிசய கிணற்றில் தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.