யூரியா உரம் வழங்குவதற்கான Online பதிவு ஆரம்பம்!!


பெரும் போகத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

www.agrarian.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விவசாயிகள் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022/23 பருவத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்பட்ட அதே விலையில் அதாவது 50 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை 10,000 ரூபாவுக்கு சோள விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.