பிஸ்கட் விலை உயர்வால் அதன் விற்பனையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சில கடைகளில் பிஸ்கெட்டுகளுக்கும விலைகுறைப்பு மற்றும் சலுகை வழங்கப்படுகிறது.
அதீத விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் பிஸ்கட் கொள்வனவுகளை புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில் பிரசசாரம் செய்து வரும் நிலையில், நுகர்வோர் பிஸ்கட் உட்கொள்வதை நிறுத்தினால் தமது தொழிற்சாலைகளை மூட நேரிடும் என இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
