வி.சுகிர்தகுமார்
சுபீட்சத்தின் நோக்கு எனும் கருப்பொருளுக்கமைய 2022ஆம் ஆண்டின் சமுர்த்திசௌபாக்கியா தேசிய வேலைத்திட்டம் சமுர்த்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதற்
சமுர்த்தி வீடமைப்பு வேலைத்திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்டபயனாளிகளுக்கு 125000 ஆயிரம் ரூபாவினை வழங்கி அவர்களது பங்களிப்போடு குறை வீடுகளைபூர்த்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் ஒரு கட்டமாக இன்று சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்; எஸ்.சிவப்பிரியாதலைமையில் ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வலயத்திற்குட்பட்ட இரு வீடுகளின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வில் ஆலையடிவேம்பு தெற்கு வலய முகாமையாளர் ரி.கவிதா கருத்திட்டஉதவியாளர் வி.சந்திரகுமார் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.பி.ராஜஸ்ரீமற்றும் எஸ்.மதனிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.