மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சாதனை

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பொறியியல் துறைக்கு 11மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 36மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆர்.பாஸ்கர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சாதனை படைத்த மாணவர்களை இன்று மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வலய உதவி கல்விப்பணிப்பாளர் திருமதி சுபாகரன் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகள்,பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களுக:கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நேற்று வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பிவில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் மாணவர்கள் சாதணை படைத்துள்ளனர்.

பாடசாலையில் வெளியாகி பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஐந்து மாணவர்கள் மூன்று ஏ சத்திகளையும் பெற்று இரண்டு,நான்கு,ஆறாவது நிலையினை மாவட்டத்தில்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆர்.பாஸ்கர் தெரிவித்தார்.