கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் திட்டமொன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் கடந்த 1998 சாதாரணதர மற்றும் 2001 உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்ற சிவானந்தியன்கள் ஒன்றினைந்து குறித்த கல்விக்கான சமூகப்பணியினை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் (20) திகதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் மட்/ மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தின் 50 மாணவர்களும், மட் / மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயத்தின் 52 மாணவர்களும் இதன்போது பயன்பெற்றிருந்தனர்.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் எந்திரி ர.வள்ளுவன் கலந்துகொண்டு பாடசாலை மாணவர்களுக்கான உதவிகளை வழங்கியிருந்தார்.
அவுஸ்திரேலியாவில் வசித்துவருபவ வர்களான செ.தயானந்தன், சே.லோகேந்திராஜா மற்றும் சு.சுபகாந் ஆகியோரது நிதி அனுசரனையில் குறித்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









