மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு பிரதேசத்தில் டீசலை பதுக்கி வைத்து கூடிய விலைக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் (01) திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 135 லீற்றர் டீசலையும் காத்தாங்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காத்தாங்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையுடன் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்ப திகாரி ரஹீம் தலைமையில் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது இந்த டீசல் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி செல்வநகர் கிழக்கு பிரதேசத்தில் டீசலை பதுக்கி வைத்து கூடிய விலைக்கு விற்பனை செய்வதாக. காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த கிடைத்த தகவல் ஒன்றையடுத்து காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இந்த டீசல் கைப்பற்றப்பட்டதாகவும் இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
கைப்பற்றப்பட்ட டீசலையும் குறித்த சந்தேக நபரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.