மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்டு வந்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் திடீரென கைதானார்.
விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய முகப்புத்த பதிவொன்றிற்காக கடந்த ஒரு ஆண்டு காலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதாகி சிறைபிடிக்கப்பட்டார்.
இவரை கடந்த கடந்த 29ம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் இவரை பிணையில் விடுவித்தார்.
மோகனின் கைதின் பின் அவரது அமைப்பின் செயலாளர் சாறுஜன் மட்டக்களப்பு TID இனரால் தேடப்பட்டார்.
சாறுஜனிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
பிணையில் விடுவிக்கப்பட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் அவர்களின் கட்சி அமைப்பினரிடமிருந்து நீதிமன்றுக்கு சட்டத்தரணிகள் ஊடாக வாக்குமூல அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர்.
அதில் அவர்கள் குறிப்பிட்ட விடயங்களாக எனது தந்தை மீது பல பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவை உண்மைக்கு புறம்பானவை , எமது அமைப்பின் தலைவரை திட்டமிட்டு சிறைக்கு அனுப்ப எனது அமைப்பின் செயலாளர் சருஜன் புலம்பெயர் வெளிநாட்டு இயக்கம் ஒன்றினால் வழி நடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் பணம் பெற்று அவர்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளார்.
அவர் தொடர்பில் உள்ள வெளிநாட்டு அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு,
அந்த வகையில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் செயலாளர் சறுஜனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்படவேண்டும்.
அவர் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளர்.
எனவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு வழங்கிய அறிக்கை மூலம் இவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.