வாழைச்சேனையில் பந்து தடுப்புச் சீலைக்கு தீ வைப்பு!!


வாழைச்சேனை பகுதியில் இயங்கி வரும் அஸ்பக் அகடமியின் விளையாட்டு மைதான சுற்றுமதில் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பந்து தடுப்பு கடின சீலைக்கு நேற்று (21) காலை இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விளையாட்டு மைதானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் போது பந்து சுற்று மதிலை தாண்டி வெளியில் செல்லாமல் தடுப்பதற்காக வேண்டி கடின சீலை பொருத்தப்பட்டிருந்தது.

அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த சீலைக்கு தீ வைக்கப்பட்டு அது முற்றாக எரிந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.