கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு அவசர அறிவித்தல்!!


கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நாளை செவ்வாய்கிழமை திருகோணமலையில் நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு தற்காழிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ. கோபால ரட்ணம் தெரிவித்தார்.

அதேவேளை நேர்முகத் தேர்வுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தூரப் பகுதிகளிலிருந்து நாளை பலரும் நேர்முகத் தேர்வுக்கு வரக்கூடும் என்பதால் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.