காணாமல் ஆக்கப்பட்டோரின் 2000 நாட்களைக் கடந்த நீதி கோரும் போராட்டத்திற்கு பிரான்ஸில் அழைப்பு!!


புலம்பெயர் தேசத்து எம் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் .

ஈழத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் 2000 நாட்களைக் கடந்து நீதி கோரும் போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக மாபெரும் பேரணி ஒன்று பிரான்ஸ் நாட்டின் லாச்சப் நகரில் இருந்து பிரான்ஸ் பாராளுமன்றம் வரைக்கும் இடம்பெறவுள்ளது.

இவ் மாபெரும் பேரணியை நாடு கடந்த தமிழிழ அரசு, தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை மற்றும் ஏனைய ஒரு சில அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கமைத்து இருக்கின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியில் பிரான்ஸ் நகரில் வாழும் எமது தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொண்டு உங்களது தார்மீக உரிமையை, கடமையை நிலைநாட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


எஸ்.நிஷாந்தன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை