சிவானந்தா பாடசாலையில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்பு மிக்க இலங்கை விஜயம் 125ஆம் ஆண்டு, ஓராண்டுத் தொடர் விழா!!


சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்பு மிக்க இலங்கை விஜயம் 125ஆம் ஆண்டு, ஓராண்டுத் தொடர் விழா மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் இன்று(2022/08/30) சிறப்பாக இடம்பெற்றது.

கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் இருந்து சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்வலம் சிவானந்தா பாடசாலையின் சுவாமி நடராஜானந்தா மண்டபத்திற்கு விவேகானந்த வீதியின் வழியாக எடுத்துவரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இறைவணக்கமும், சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலியும் இடம்பெற்று அதிதிகளை வரவேற்கும் முகமாக வரவேற்பு நடனமும், சிவானந்தா பாடசாலையின் பிரதி அதிபர் திரு.க.சுவர்ணேஸ்வரன் அவர்களால் வரவேற்புரையும் இடம்பெற்றது.

இதன்போது சுவாமி நீலமாதவானந்த ஜீ மகராஜ் அவர்களால் அறிமுக உரையும் அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள், உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் போன்ற கௌரவிப்புக்கள் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சுவாமி அக்‌ஷராத்மானந்த ஜீ மகராஜ் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்று சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு Mind your Mind காணொளி காட்சியும் காண்பிக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவு பெற்றன.