வி.சுகிர்தகுமார்
ஆலய உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செலவிடுவது எனும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்மானத்திற்கு அமைய ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு நன்கொடையாளர்களும் நிதியை வழங்கிவரும் நிலையில் தொடராக இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம் நேற்று இரவு இடம்பெற்ற திருவிளக்கு பூஜையினை தொடர்ந்து வெளிவீதி உலாவின் தெற்கு வாசலில் வைத்து இப்பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஏ.எம்சி.அபயகோன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சிவபூமி என அழைக்கப்படும் ஈழமணித்திருநாட்டின் தென்கிழக்கில் வரலாற்றுச் சிறப்புடன் இயற்கை எழில் நிறைந்த அக்கரைப்பற்று பதிதனில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் கடந்த இரு வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகோற்சவம் இடம்பெறாத நிலையில் இவ்வருடம் மகோற்சவம் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற யாகபூஜைகள் தொடர்ந்து கொடித்தம்ப பூஜையும் திருவிளக்கு பூஜையும் இடம்பெற்றது. பின்னர் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன் பின்னர் எழுந்தருளிய விநாயகப்பெருமான் அடியார்களினால் நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் உள்வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அழகிய சப்பரத்தில் அமர்ந்தப்பட்டு வெளிவீதி உலாவாக அழைத்துச் செல்லப்பட்டார்.
தெற்கு வாசலில் வைத்து மாணவர்களின் சமய சொற்பொழிவுகள் பேச்சுக்கள் மற்றும் நடன நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கல்வியில் சிறந்து விளங்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இதேநேரம் ஆலய மகோற்சவ பணிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் உதவியினை வழங்கிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படைப்பிரிவின் பிரிகேடியர் ஏ.சி.ஏ.அபயகோன் உள்ளிட்டோர் குருமார்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.