வி.சுகிர்தகுமார்
தேசிய துரித உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழான வேலைத்திட்டங்கள் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவின் பல்வேறு மட்டங்களிலும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் ஆலையடிவேம்பு வடக்கு வங்கிச்சங்க வாளாகத்தில் இடம்பெற்ற மரவள்ளி நடுகை நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் கே.சத்தியப்பிரியன் சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.சுரேஸ்காந் மற்றும் கே.கவிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
அரசாங்கத்தின் வேண்டுகோள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் உணவு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் மரவள்ளி செய்கை மற்றும் வற்றாளை செய்கை தானியவகை உற்பத்திகள் போன்ற துரித உணவு உற்பத்திகள் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் வீடுகள் பொது இடங்கள் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.