முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சகோதரர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் சதாசிவம் மயூரன் இன்று மாலை இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள தனியார் உணவுவிடுதியொன்றில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காணியொன்று தொடர்பில் இலஞ்சம் வாங்கும்போதே இலஞ்சி ஒழிப்பு பிரிவினரால் அவர் கையுமெய்யுமாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் சதாசிவம் மயூரன் மற்றும் அவரின் உதவியாளர் இருவரும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.