மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாக குழு தெரிவு


மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம் 26.06.2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.30 மணியளவில் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இறைவணக்கத்தை தொடர்ந்து சங்க உறுப்பினர் கு.விநாயகமூர்த்தி அவர்களின் தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பமான கூட்டத்தில் தலைவரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டதோடு தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் இ.பிரதீஸ்காந்த் அவர்களால் சென்ற பொதுக்கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அத்தோடு சங்கத்தின் நடப்பு நிர்வாக கால செயற்பாட்டறிக்கையும் துணைச்செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொருளாளர் தேசபந்து மு.செல்வராசா அவர்களால் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பேசிய தலைவர் , அடுத்த நிகழ்வாக புதிய செயற்குழு தெரிவுசெய்யப்பட இருப்பதால் நடப்பு நிர்வாகசபை கலைக்கப்படுவதாகவும் புதிய செயற்குழு தெரிவு செய்வதற்கு தற்காலிக தலைவர் ஒருவரை தெரிவு செய்யுமாறும் சபையை கேட்டுக்கொண்டார்.

அதன்போது தற்காலிக தலைவராக தமிழ்ச்சங்க காப்பாளரும் கிழக்கு பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் மா. செல்வராஜா அவர்கள் சபையோரால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டு அவரின் தலைமையில் பின்வரும் வகையில் செயற்குழு தெரிவுகள் இடம்பெற்றன.
தலைவர் -
சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி
செயலாளர் -
சட்டத்தரணி மு. கணேசராசா
பொருளாளர் -
ச. தங்கராசா
துணைத்தலைவர்கள் -
கலாபூஷணம் ஆ.மு.சி. வேலழகன்
ப. குணசேகரன்
செ . அமிர்தலிங்கம்
பா. செல்வராசா
சைவப்புலவர் சிவஞானஜோதி ஞானசூரியம்
வ.சிவசுந்தரம்
துணைச்செயலாளர்கள் -
இ.பிரதீஸ்காந்த்
திருமதி.பிரியா கருணாகரன்
வே.அமிர்தலிங்கம்
ச.கணேசமூர்த்தி
துணைப்பொருளாளர் -
ச.ஜெயராசா
கணக்காய்வாளர்கள் -
வி.இராசலிங்கம்
இரா. புவிராசசிங்கம்
ஆலோசகர்கள் -
தேசபந்து மு. செல்வராசா
கவிக்கோ வெல்லவூர் கோபால்
திருமதி அசோகா யோகராஜா
க.தருமரெத்தினம்
மா.திருநாவுக்கரசு
இவர்களோடு முப்பது பேரைக்கொண்ட செயற்குழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர் .
காப்பாளர்கள் -
பேராசிரியர் சி. மௌனகுரு
பேராசிரியர் மா. செல்வராஜா
கலாபூஷணம் செ.எதிர்மன்னசிங்கம்
அருட்திரு அ.அ.நவரெத்தினம்
செயற்குழு தெரிவுகள் முடிவுற்றதும் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க தலைவராக தன்னை மீண்டும் தெரிவு செய்தமைக்காக சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்கள் சபைக்கு நன்றி தெரிவித்ததோடு சங்கத்தின் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ள செயற்குழுக்கூட்டத்தில் திட்டமிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என கேட்டுக்கொண்டார் .
அதனைத்தொடர்ந்து சங்க செயலாளர் சட்டத்தரணி மு. கணேசராசா அவர்களின் நன்றியுரையுடன் பிற்பகல் 1.00 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.