
இவ் இரண்டு போட்டிகளிலும் don't touch sports club வெற்றியினை சுவீகரித்து கொண்டது.அதி கூடிய தனிநபர் ஒட்டங்களாக சீப்ரா விளையாட்டு கழகத்தின் வீரர் அருன்ராஜ் 65 பந்துகளில் 79 ஓட்டங்களை பதிவு செய்தார்
அதி கூடிய இரு நபர்கள் சேர்த்த ஒட்டங்களாகவும் சீப்ரா விளையாட்டு கழகத்தின் வீரர்கள் கிஷோ மற்றும் அருன்ராஜ் அவர்கள் 67 பந்துகளில் 87 ஓட்டங்களை பதிவு செய்தார்கள்
இரண்டு போட்டியிலும் அதி கூடிய தனிநபர் ஓட்டங்கள் முதலாவது போட்டியில் Don't Touch கல்குடா அணி சார்பாக சமீம் 39 ஓட்டங்கள் 34 பந்துகளில் பேற்று கொண்டார். சீப்ரா விளையாட்டு கழகம் சார்பாக புவி 21 ஓட்டங்கள் 23 பந்துகளில் பேற்று கொண்டார்.
இரண்டாவது போட்டியில் Don't Touch கல்குடா அணி சார்பாக சப்றீன் 35 ஓட்டங்கள் 24 பந்துகளில் பேற்று கொண்டார். அஸ்பக் 35 ஓட்டங்கள் 34 பந்துகளில் பேற்று கொண்டார் சீப்ரா விளையாட்டு கழகம் சார்பாக கிஷோ 42 ஓட்டங்கள் 30 பந்துகளில் பெற்றுக்கொண்டார். அருன்ராஜ் 79 ஓட்டங்கள் 65 பந்துகளில் பெற்றுக்கொண்டார்
சிறப்பான பந்து வீச்சாளர்கள் சீப்ரா விளையாட்டு கழகம் சார்பாக முதலாவது போட்டியில் சுரேஷ் 4 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது போட்டியில் சுரேஷ் 4 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Don't Touch கல்குடா அணி சார்பாக முதலாவது போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைகைப்பற்றினார்
இரண்டாவது போட்டியில் மூன்று வீரர்கள் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற அணிக்கான கிண்ணத்தை சீப்ரா விளையாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் ஜெயசீலன் அவர்களும் இரண்டு போட்டியிலும் நடுவனம் புரிந்த கோட்டமுணை அணியின் வீரரினாலும் வழங்கி வைக்கப்பட்டது.
சிறந்த வீரருக்கான கிண்ணத்தை சீப்ரா விளையாட்டு கழகத்தின் விளையாட்டு தலைவரினால் வழங்கி வைக்கப்பட்டது
இரண்டு கழகங்களுக்கும் விளையாடுவதற்கு மைதானத்தை தந்து உதவிய கோட்டமுணை விளையாட்டு கழகத்திற்கும் ஏற்பாடுகளை செய்து தந்த றிக்கோ மற்றும் மயூரன் அவர்களுக்கும் நடுவனம் புரிந்து தந்த கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் வீரர்களுக்கும் சீப்ரா மற்றும் don't touch அணிகள் சார்பில் இரண்டு அணிகளினால் தலைவர்களினால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது
கோட்டமுனை மைதானம் திறப்பு விழாவில் முதலாவது போட்டியாக கோட்டமுனை விளையாட்டு கழகத்திற்கும் இலங்கைக்கு உலக கிண்ணத்தை பெற்று தந்த லேஜன்ட் அணிக்குமான போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடந்து கோட்டமுனை மைதானத்தில் நடைபெற்ற 7 வது போட்டியாக சீப்ரா விளையாட்டு கழகம் தாழங்குடா மற்றும் don't touch sports club கல்குடா அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.