"முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றும் இரண்டாவது நாளாக கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாகவும் அதனைத் தொடர்ந்து செங்கலடி சந்தைப் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது .
இந் நிகழ்வினை, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பெரும் ஆவலுடன் மக்கள் உணர்வு பூர்வமாக பருகி வருகின்றனர்.
அத்துடன், முள்ளி வாய்க்கால் கஞ்சி என்ற துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதே நிகழ்வு செங்கலடி சந்தைப் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் , மதகுருமார்கள் , சிவில் அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் வடக்கு கிழக்கு முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .



