ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 380 ரூபாவாக வங்கிகளினால் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் இன்று சராசரியாக 365 ரூபாவாக டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களின் பின் முதற்தடவையாக டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
