ஆலையடிவேம்பு - இரு மாதங்களின் பின்னர் லிற்றோ எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டது

 


வி.சுகிர்தகுமார் 

ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் சுமார் இரு மாதங்களின் பின்னர் இன்று லிற்றோ எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.

நேற்றிரவு கிடைத்த தகவலை அடுத்து இரவு  10 மணிமுதல் குறித்த இடத்தில் காத்திருந்த மக்கள் இன்று காலை 8 மணிமுதல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுச் சென்றனர்.

12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் 5000 ரூபாவிற்கும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் 2100 ரூபாவிற்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேநேரம் 300 எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் காத்திருந்த அதிகளவான பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

இதேநேரம் நேற்றும் அங்கு இதுபோன்று மக்கள் கூடியிருந்த நிலையில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையில்; கவலையடைந்த மக்கள் அரசாங்கத்தை திட்டித்தீர்;த்து வெளியேறினர்.

அத்தோடு இதுவரையில் ஆலையடிவேம்பு மக்கள் அமைதியாகவே உள்ளதாகவும் இன்று தமக்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படவில்லையாயின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி நிலை உருவாகும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.