மட்டக்களப்பு- ஆயித்தியமலை கமநல சேவை நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் பாரம்பரிய விதை நெல் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது.
தற்போதைய காலகட்டத்தின் பாரம்பரிய விதை நெல் உற்பத்தியின் தேவையும் பசுமை விவசாயம் எவ்வளவு அவசியம் என்பது பற்றியும் சேதன பசளை பாவனை மூலம் ஏற்படும் நன்மைகள் தொடர்பாவும் இரசாயன பதார்த்தங்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது .
இந் நிகழ்வின்போது பாரம்பரிய விதை நெல் உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கபட்டதுடன், தலைவர் மற்றும் செயலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பாரம்பரிய விதை நெல் உற்பத்தி கிராமங்களாக மணிபுரம் மற்றும் பனங்கண்டடிசேனை ஆகிய கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.
