ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் Transparency International Srilanka நிறுவனமானது LIFT நிறுவனத்துடன் இணைந்து தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்றை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடாத்தியிருந்தது.

லஞ்ச ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு மக்களோடு தொடர்புபட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

LIFT நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வானது மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் Transparency International Srilanka நிறுவனத்தின் சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் பிரியா போல்ராஜ், உத்தியோகத்தர்களான கசுல் ரணசிங்க, ரகுமான் ஆகியோர் வளவாளர்களாகவும் LIFT நிறுவனத்தின் கள உத்தியோகத்தர் தனுஜா, உதவி பிரதேச செயலார் , கணக்காளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.