எதிர்வரும் 25 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு அடங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ள போதும், அதனை உள்நாட்டு பாவனைக்கு வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், வைத்தியசாலைகள், தகனசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.