வி.சுகிர்தகுமார்
வரலாற்றுச் சிறப்புமிகு அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை அருள்மிகு பெரிய பிள்ளையார் ஆலயத்தின்; (ஸ்ரீ சித்திவிநாயகர் மகாதேவஸ்தானம்) சமுத்திர தீர்த்தோற்வசம் இன்று நடைபெற்றது.
சித்திரா பௌர்ணமி பிரம்ம மகோற்சவ திருவிழாவின் முன்னிட்டதாக 21 அடி உயரமாக அமைக்கப்பட்ட சித்திரத்தேரோட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் இன்று காலை தீர்த்தோற்வச கிரியைகள் ஆரம்பமானது.
இதன் பின்னராக விநாயகப்பெருமான் அழகிய தேரில் எழுந்தருளி; உள்வீதிவலமாக அடியார்கள் தூக்கிச் செல்லப்பட்டார்.
பக்தர்களின் அரோகரா வேண்டுதலுக்கு மத்தியில் மங்கள வாத்தியம் முழங்க வீதி உலாவாக வங்கக்கடல் நோக்கி புறப்பட்டார்.
வங்கக்கடலோரம் அமர்ந்த எம்பெருமானுக்கு அபிசேக பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ எம்பெருமான் சமுத்திர தீர்த்தம் ஆடினார்.
சிவபூமி என அழைக்கப்படும் ஈழமணித்திருநாட்டின் தென்கிழக்கில் வரலாற்றுச் சிறப்புடன் இயற்கை எழில் நிறைந்த அக்கரைப்பற்று பதிதனில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் பெரிய பிள்ளையார் ஆலயத்தின் ; சித்திரா பௌர்ணமி பிரம்ம மகோற்சவம கடந்த ;04ஆம் திகதி வாஸ்த்து சாந்தி கிரியைகளுடன் ஆரம்பமாகி 05ஆம் திகதி நடைபெற்ற கொடியேற்றம் 14ஆம் திகதிவரை இடம்பெற்ற திருவிழாக்கள் 15ஆம் திகதி இன்று இடம்பெற்ற தேரோட்டம் 16ஆம் திகதி இன்று இடம்பெறும் தீர்த்தோற்சவம் கொடியிறக்கத்துடனும் நாளை 17 ஆம் திகதி இடம்பெறும் திருப்பொன்னூஞ்சல்;; பூங்காவனத்திருவிழா, 18ஆம் திகதி ஸ்ரீ வைரவர் பூஜை, 19ஆம் திகதி இடம்பெறும் ஐயனார் பூசையுடனும்; நிறைவுறும்.
ஆலய தலைவர் மு.கு.வடிவேல் தலைமையில் இடம்பெறும் சித்திரா பௌர்ணமி பிரம்ம மகோற்சவ திருவிழாவின் தீர்த்தோற்வச கிரியைகள் யாவும்; உற்வசகால பிரதமகுரு பிரதிஷ்டா இளவரசன் பிரதிஷ்டா கலாநிதி தற்புருச சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.