வறுமை நிலையில் உள்ளவர்களை தேடி தொடர்ச்சியாக உதவும் ‘வணக்கம் வாழ்க தமிழ்’ அமைப்பு

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இதன் காரணமாக தினக்கூலி தொழில்செய்வோர் உட்பட பலர் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இலங்கையில் இரண்டு வருடங்களாக ஏற்பட்டிருந்த கொரனா தொற்று நிலைமை மற்றும் தற்போதை பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் அன்றாடம் உணவுக்கே மிகவும் கஸ்டப்படும் நிலை காணப்படுகின்றது.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் அவர்களின் குடும்பங்களும் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பில் புலம்பெயர் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் இயங்கும் வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் கவனத்திற்கு கொண்டுசென்றதை தொடர்ந்து பல்வேறு உதவிகள் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள மீனவர் குடும்பங்களுக்கு ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் அப்பகுதி மாணர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

புங்குடுதீவினை பிறப்பிடமாகவும் கனடாவினை வசிப்பிடமாகவும் கொண்ட நிஷான்-மம்தா தம்பதிகளின் மகன் கரிகாலனின் 01வது பிறந்த தினத்தினை முன்னிட்டு சுமார் மூன்றரை இலட்சம் ரூபா செலவில் 30 குடும்பங்களுக்கான உதவிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

‘வணக்கம் வாழ்க தமிழ்’ அமைப்பின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் பிரவீன் தலைமையிலான குழுவினரால் இந்த பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.