கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவு திருப்பலி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது.
இயேசுபிரான் மனிதர்களின் பாவத்தை நீக்கி புனிதராக்குவதற்காக சிலுவையில் பாடுபட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஆராதனையில் ஆலய முன்றலில் புதிய தீ மூட்டப்பட்டு தீ ஆசிர்வதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இருளினில் மெழுகுதிரியை ஏற்றி உயிர்ப்பின் பெருநாள் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
இதன்போது இடம்பெற்ற விசேட பூசை வழிபாட்டின் போது திருமுழுக்கு வழங்கும் நிகழ்வும், புதிய நீர் ஆசீர்வதிக்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், உயிர்த ஆண்டவரிற்கு விசேட ஆராதனைகளும் இடம்பெற்றன.
இத்திருப்பலி ஆராதனையில் ஆலய பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளாரும், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பெருமளவான இறைமக்கள் பத்தியுடன் கலந்து கொண்டிருந்தனர்.