மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குருளை சாரணர்களுக்கான வெண்கலத் தாரகை சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குருளை சாரணர்களுக்கான வெண்கலத் தாரகை சூட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாட்டின் கீழ் சாரணர் இயக்கம் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன்கீழ் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சாரணர் மற்றும் குருளை சாரணர் இயக்கங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு செயற்பாடுகள் மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு கொரனா அச்சுறுத்தல் காரணமாக குருளை சாரணர்களுக்கு வழங்கப்படவிருந்த வெண்கலத் தாரகை சூட்டும் செயற்பாடுகள் பிற்போடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு இன்று மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சாரணர் இயக்க பிரிவுக்கான பொறுப்பாளர் என்.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய தினம் 27குருளைச்சாரணர்களுக்கு இந்த வெண்கலத் தாரகை அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சாரணர் போதனாசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.