கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன்

 


வி.சுகிர்தகுமார் 

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இப்போட்டியின் இரண்டாவது இடத்தை பனங்காடு அக்னி விளையாட்டுக்கழகம் தனதாக்கி கொண்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையின் கீழ் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் அ.ரிசாந்தனின் வழிநடத்தலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற போட்டிகளின் நேற்று மாலை இடம்பெற்ற இறுதி போட்டியிலேயே ஜொலிபோய் விளையாட்டுக்கழகம் எவ்வித விக்கற் இழப்பின்றி சம்பியனாகியது.
குறித்த போட்டியில் அக்னி விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 8 ஓவர்கள் நிறைவில் 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் மூன்று ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை தொட்டது.
இதேநேரம் எல்லே போட்டியிலும் ஜொலிபோய்ஸ் சம்பியனானதுடன் கரப்பந்தில் இரண்டாம் இடத்தை பெற்றது.
அத்தோடு உதைப்பந்தாட்டத்தில் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழகம் சம்பியனாகவும் அக்னி விளையாட்டுக்கழகம் இரண்டாம் நிலையினையும்  கரப்பந்தில் யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனாகவும் எல்லே போட்டியில் அக்னி விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தையும் இவ்வருடம் பெற்றுக்கொண்டது.
இச்சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.சுகிர்தகுமார் பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் இ.ஹேமலக்ஸன் நீதிமன்றத்தின் புத்தககாப்பாளர் த.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.