மட்டக்களப்பு வாலிபர் அணியால் பயங்கரவாத தடைசட்டத்தை நீக்ககோரி கையொப்பம் பெறும் போராட்டத்திற்கு அழைப்பு!


பயங்கரவாதடைச்சட்டத்தை முழுமையாக நீக்ககோரிகையொப்பம்சேகரிக்கப்பட
வேண்டும் என கடந்த ஜனவரி 30,ம் திகதி  இலங்கை தமிழரசு கட்சி மத்திய குழுவி் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 27/02/2022, ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30, மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் அணி தலைவர் லோ.திவாகரன் தலைமையில் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இந்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.


இந்த ஆரம்ப நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகரசபை முதல்வர் பிரதி முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள்,பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதி்தவிசாளர்கள், அதன் உறுப்பினர்கள், வாலிபர் அணி,மகளீர் அணி உறுப்பினர்கள், மத தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள்,என பலதரப்பட்டவர்களும் இனம் மதம் கட்சி வேறுபாடுகள் இன்றி அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி செயலாளர் க. சஷீந்திரன் தெரிவித்தார்.


பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த 1979,ம் ஆண்டு தற்காலிக ஏற்பாட்டு சட்டமாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு இன்று 42,ஆண்டுகளை கடந்தும் அந்த சட்டம் தொடர்கிறது.


இந்த சட்டம் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராகவே கூடியவரை பயன்படுத்தப்பட்டு பல வதைகளுடன் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டதுடன் தற்போதும் ஏறக்குறைய 388, பேர் இந்த சட்டம் ஊடாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


ஆனால் தற்போது நாட்டில் உள்ள தமிழ்,முஷ்லிம்,சிங்கள மக்களும் இந்த சட்டத்தின்ஊடாக பல துன்பியலை அனுபவித்துவருகின்றனர்.


தற்போது சர்வதேச சமூகம், ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் எல்லாம் இந்த கொடிய சட்டத்தை உடனே முற்றாக நீக்குமாறு இலங்கை அரசுக்கு வேண்டுகோளை கொடுத்துவருகின்ளனர்.


இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 27,ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனைவரும் காந்தி பூங்காவுக்கு வருகை தந்து கையொப்பம் இட்டு முழு ஆதரவை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.