மட்டக்களப்பில் தொடரும் மழை –பல பகுதிகளில் வெள்ளத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி நீர்பாசன திட்டப்பகுதியில் இன்று காலை வரையில் அதிககூடிய மழை வீச்சியாக 91மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

நேற்று தொடக்கம் பெய்வரும் மழை காரணமாக போரதீவுப்பற்று, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, மண்முனைப்பற்று, காத்தான்குடி, மட்ட்க்களப்பு மாநகரசபை,ஏறாவூர்ப்பற்று,கிரான்,வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளில் போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் வெள்ள நீர் பாயும் நிலையும் ஏற்பட்டுள்ளது.