பிரதேசசபைகளில் புத்தாண்டில் கடமைகள் பொறுப்பேற்பு

கடும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களிலும் இன்று 2022 ஆம் ஆண்டுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களில் இன்றைய தினம் தேசிய கொடி ஏற்றப்பட்டு புதிய வருட கடமைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. 

இதன்போது நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்தமாக இரண்டு நிமிட செலுத்தப்பட்டதுடன்.புதிய ஆண்டுக்கான சத்திய பிரமாண நிகழ்வு நடைபெற்றன.

போரதீவுப்பற்று பிரதேசசபை,மண்முனைப்பற்று பிரதேசசபைகளில் இன்றைய தினம் புதிய ஆண்டுக்கான கடமையேற்பு நிகழ்வு நடைபெற்றது.

பொதுச் சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 25ஃ2021 ஆம் திகதிய சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று மண்முனைப் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். 

குறித்த நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் , உறுப்பினர்கள், செயலாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், சுகாதார  தொழிலாளர்கள் உட்பட நூலகங்களின் ஊழியர்களும் கலந்து கொண்டனர். 

எமது நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அமைதி பேணப்பட்டதுடன்  இவ் ஆண்டிகான அரச சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டதுடன் தவிசாளரின் விசேட உரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேசசபையில் பிரதேசசபையின் செயலாளர் தலைமையில் பதவி சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.