மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான சீருடைகள் வழங்கி வைப்பு!
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச சபை பிரிவில் உள்ள மகிழவெட்டுவான் விவேகானந்தாவிளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன்வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் கோபாலப்பிள்ளை அவர்கள் கலந்து கொண்டு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் அணிக்கான சீருடைகளை வழங்கி வைத்திருந்தார்.
இதன் போது சேவகம் நிறுவனத்தின் ஊடாக புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 20 கிரிக்கெட் வீரர்களுக்கான கழகத்தின் சின்னம், வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட சீருடைகள்(டீசேர்ட், போட்டம்) வழங்கிவைக்கப்பட்டன.
மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் டி.கோபாலப்பிள்ளை,சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன்,மகிழவெட்டுவான் வட்டார பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான வி.சரஸ்வதி மற்றும் சேவகம் தொண்டு நிறுவனத்தின் பொருளாளர் கு. சுபோஜன், சேவகம் நிறுவனத்தின் உறுப்பினர்களான அ. ஜெயராஜ், ஜெ. ஜேப்பிரியன் மற்றும் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.