மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்று தீவிரமடைந்துள்ள அதேவேளையில் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் சைனோபாம் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் தொடர்ச்சியாக கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் இதுவரையில் எந்தவித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாமாங்கம் சகாயமாதா தேவாலயம்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் என்பனவற்றில் இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரனின் வழிகாட்டலின் கீழ் மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதுவரையில் எந்தவித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்களை அருகில் உள்ள தடுப்பூசி வழங்கும் பகுதிக்கு சென்று தங்களுக்கான தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.