நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் பாராட்டப்படவேண்டியவை என்றாலும் அதன் மூலம் தற்போதைய கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தற்போதைய நிலைமை தவிர்க்க முடியாதது என அவர் தெரிவி;த்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மூலம் தற்போதைய பரவலை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் எதிர்கால அலையை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
15 வீதமான மக்களிற்கே இரண்டு டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் தற்போதைய பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேலும் ஒன்றரை மாதங்கள் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு டோஸ்களையும் பெற்று இரண்டு வாரங்களின் பின்னரே தடுப்பூசியின் பலன் தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுவரை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கடுமையான சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்கவேண்டும்இவீடுகளிற்குள்ளேயே முடிந்தளவு முடங்கியிருங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.