(புருசோத்)
திருகோணமலை, குச்சவெளி, ஜயாநகர் பிரதேசத்தில் நேற்று (ஓகஸ்ட்,21) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கடற்படையினரால் சுமார் ஒரு மில்லியன் ரூபாவிற்கு பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதற்கமைய, 3 கிலோ 548 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சோதனையின் போது சட்டவிரோத பொருட்கள் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.