(புருசோத்)
100 தொன் மருத்துவ திரவ ஒட்சிசனை ஏற்றிய இந்திய கடற்படையைச் சேர்ந்த 'சக்தி' எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலை வரவேற்க, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே. ஜெகொப் ஆகியோர் கொழும்பு துறைமுகம் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.