மட்டக்களப்பு மாவட்டத்தின் 14சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இன்று ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 12000 ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது கட்ட தடுப்பூசிகள் கடந்த மாதம் ஏற்றப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மற்றும் சிசிலியா பெண்கள் உயர் பாடசாலை ஆகியவற்றில் இன்று ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசிகளும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதுடன் இதுவரையில் எந்த வித தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.