பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் இராணுவத்தளபதி விசேட அறிவிப்பு...

(புருசோத்)

 *பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் இராணுவத்தளபதி விசேட அறிவிப்பு...*

▫இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகின்றது.

▫அத்தியாவசிய தொழில்களில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

▫எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகைத்தருபவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியம்என இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய எந்தவொரு போக்குவரத்துக்களும் இடம்பெறாது எனவும்.

மேலும், சுகாதாரம், சுற்றுலா, விவசாயம், ஆடைத் தொழிற்சாலைகள், மற்றும் துறைமுகங்களில் சேவையாற்றுபவர்களுக்கு மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும் எனவும்.

அது மாத்திரமின்றில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் பயணிப்பவர்களுக்கும் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.