களுவாஞ்சிக்குடி நகர் பகுதில் வைத்து கை குண்டு ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது


 (புருசோத்)

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட களுவாஞ்சிகுடி நகர் பகுதியில் வைத்து இன்று (13) கை குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். 

களுவாஞ்சி குடி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை கைது செய்துதாக களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிபடையின் கட்டளையிடும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

விசாரனையில் இருந்து மேலும் தெரிய வருவதாவது சந்தேக நபர் அம்பாறை திருக்கோவிலில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பகுதிக்கு கைக்குண்டு ஒன்றை விற்பனைக்கு எடுத்து சென்ற போது கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கைது செய்தாகவும் விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர் 

மேலும் சந்தேக நபர் விநாயகபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடய விஜயதாச பிரசாந்தன் எனும் இளைஞரை கைது செய்ததாகவும் அவரிடம் இருந்து கை குண்டு ஒன்றும் மேட்டார் சைக்கில் ஒன்றும் கைபெற்ற பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவிக்கின்றனர் மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.