மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முதலாக அழகிய வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் கும்பாபிசேக பெருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் வாவிக்கரையோரத்தில் அழகிய ரம்மியமான சூழலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கான ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் கும்பாபிசேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் கும்பாபிசேக கிரியைகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
நீண்டகாலமாக குறித்த பகுதியில் ஆஞ்சநேயர் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் கிட்ணன் மகேஸ்வரன் என்பவரின் முயற்சியினால் அழகிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை காலை முதல் மாலை வரையில் பஞ்சமுக ஆஞ்சநேயகருக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 8.00மணி தொடக்கம் 10.00வரையுள்ள சுபவேளையில் கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.
பல்வேறு அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத்தின் கும்பாபிசேகத்தில் கலந்துகொண்டு அனைத்து சௌபாக்கியங்களையும் பஞ்சமுக ஆஞ்சநேயரின் அருளையும் பெற்றுக்கொள்ளுமாறு பிரதிர்ஸ்டா பிரதமகுரு சிவஸ்ரீ சுந்தர ஸ்ரீரங்கநாதக்குருக்கள்,சர்வபோதகாசிரியர் சிவஸ்ரீ சதா மகாலிங்கசிவ குருக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.