கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு பால்குட பவனி இன்று இடம்பெற்றது.
ஏறாவூர் வீரபத்திர் சுவாமி ஆலயத்தில் இருந்து பால்குட பவனி பக்த அடியார்களால் ஏறாவூர் பிரதான மற்றும் உள்ளக வீதிகளால் பவணியாக கொண்டு வரப்பட்டு - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மீண்டும் கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்ஐ அடைந்தது.
பால்குட பவனியானது ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை அடைந்ததும் அம்பாளுக்கான விசேஷ அபிஷேகம் நடைபெற்றது.
நுற்றுக்கணக்கான பக்தர்கள் அம்பாளுக்கான இன்றைய பால்குட பவணியில் கலந்து கொண்டிருந்ததுடன் , காவடி உள்ளிட்ட பல நேர்த்திக்கடன்களையும் பக்தி பூர்வமாக செலுத்தினர்.